வடக்கு மாகாண தனியார் கல்வி நிறுவனங்களில் சுகாதார வசதிகள் பரிசோதனைக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்படும் சுகாதார வசதிகள் குறித்துப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகரசபை மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள் உள்ளிட்டவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் தேவையான சுகாதார வசதிகள் பல இடங்களில் இல்லாத நிலை காணப்படுவதாகவும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அவற்றை பரிசோதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

Share this Article