11.01.2025 சனிக்கிழமை பகல் 1.00 மணி வானிலை அவதானிப்பு.
வங்காள விரிகுடாவில் கடந்த 07.01.2025 அன்று உருவாகிய காற்றுச்சுழற்சியின் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகமழை நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்கிடைக்கும் மழை எதிர்வரும் 16.01.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
கடந்த சில நாட்களாக குறிப்பாக 07 ம் திகதி யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி, 08ம் திகதி முல்லைத்தீவு மற்றும்திருகோணமலை,9ம் திகதி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு 10 ம் திகதிவவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு கிடைத்த மழைஇன்று மாலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்பரவலடையும்.
அதே வேளை மீண்டும் எதிர்வரும் 18.01.2025 முதல் 22.01.2025 வரை வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானதுவரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே அறுவடைச் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மேற் குறிப்பிட்டநாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
வடக்கு, கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு கடற்பகுதிகள் எதிர்வரும் 15.01.2025 வரை கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குசெல்வதை தவிர்ப்பது சிறந்தது.