வடக்கு கடலில் வழங்கப்பட்ட அனுமதி – பெரும் போராட்டம் நடத்தத் தீர்மானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று வடக்கு மாகாண மீனவசங்க பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளுடான கலந்துரையாடல் ஒன்று யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

அதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராகப் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தி ஜனாதிபதிக்கு மனு ஒன்றைக் கையளிப்பதற்கு கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

போராட்டம் நடைபெறவுள்ள திகதி தொடர்பில் மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Share this Article