வடக்குமாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 61 பேர் உட்பட வடக்குமாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஃடி,மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 42 பேர் உட்பட வடக்கில் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.குடாநாட்டினைச் சேர்ந்த 19 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Share this Article