வடக்கிற்கான ரயில் சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணையில் திருத்தம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்று(ஒக்ரோபர் 21) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40 இற்கு காங்கேசன் துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி தொடருந்து இன்று முதல் முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதுதவிர சனிக்கிழமை மாத்திரம் காலை 05.20 இற்கு கொழும்பு கோட்டை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கும் தொடருந்து இன்று முதல் காலை 5.30 அளவில் பயணத்தை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article