லோகேஸ்வரன் சுதர்ஜனன் காங்கேசன்துறையில் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வீட்டிலிருந்து யாழ். நகருக்குச் சென்ற பின்னர் காணாமல் போயிருந்த நீர்வேலி தெற்கைச் சேர்ந்த இளைஞர், காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து நேற்று (மார்ச் 3) மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட 23 வயதான லோகேஸ்வரன் சுதர்ஜனன் என்ற இளைஞரே காணாமல் போயிருந்தார்.

கடந்த புதன்கிழமை (22ஆம் திகதி) நீர்வேலியில் இருந்து யாழ்ப்பாணம் நகருக்குச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் நேற்று காங்கேசன்துறை பகுதியில் ஆடுமேய்க்கச் சென்ற ஒருவர், அங்குள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இளைஞர் ஒருவர் தனிமையில் இருப்பதை அவதானித்து, காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, இளைஞரை பெற்றோரிடம் சேர்ப்பித்துள்ளனர்.

Share this Article