இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ‘KILLES’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த வெளியீட்டு நிகழ்வு நேற்று (ஜனவரி 20) பிற்பகலில் கொழும்பில் நடைபெற்றது.
இந்தப் புத்தகத்தில் பந்துவீச்சு தொடர்பான 21 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
விழாவில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சனத் ஜயசூரிய, மாவன் அத்தப்பத்து, மஹெல ஜெயவர்தன, சமிந்த வாஸ், அஜந்த மெண்டிஸ் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
அதேபோல, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பிற அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
லசித் மாலிங்க எழுதிய புத்தகம் முதலில் அவரது தந்தையால் ஶ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவிடம் வழங்கப்பட்டது. பின்னர், அந்தப் புத்தகம் மற்ற விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்டது.