கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் ரயிலின் கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தை அநாதரவான நிலையில் நேற்று (மார்ச் 10) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் சிசுவைக் கைவிட்டுச் சென்றவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீல நிற பிளாஸ்டிக் கூடையொன்றில் வைக்கப்பட்டு இந்த குழந்தையை அநாதரவாக மலசல கூடத்துக்குள் வைத்துச் சென்றுள்ளதாகவும் கொழும்பு கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரயிலிலுள்ள மலசல கூடத்துக்குச் சென்ற நபரொருவர் குழந்தையைப் பார்த்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
ரயில் நிலைய அதிபர் உட்பட அதிகாரிகள் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று குழந்தையை மீட்டு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சுமார் ஒன்றரை மாத வயதான இந்தக் குழந்தையை கோட்டை பொலிஸார் தேசிய வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.
குழந்தையை மலசல கூடத்துக்குள் கைவிட்டுச் சென்றவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் ரயில் நிலைய சிசிரிவி கமராக்களை ஆராய்ந்து வருகின்றனர்.