யாழ். வர்த்தகர்களுடன் யாழ். சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சந்திப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் இன்று கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் முறையற்ற விதத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வர்த்தகர்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகளால் பொலிஸ்மா அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நகர அபிவிருத்தி அமைச்சால் பெருந்தொகை செலவில் அமைக்கப்பட்ட வாகன தரிப்பிடம் இருக்கும் நிலையில் அதைச் செயல்படுத்துவதற்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

Share this Article