யாழ். வர்த்தகர்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவுறுத்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நகர பசார் வீதி வர்த்தகர்களுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். நகரப் பகுதியில் உள்ள பசார் வீதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வர்த்தகர்களால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article