யாழ்.லயன்ஸ் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் முதியோர் சங்கத்தினருக்கு ஒன்றுகூடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இருபாலை கிழக்கு முதியோர் சங்க உறுப்பினர்களுக்கான தேனீர் விருந்துபசார ஒன்று கூடல் பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார்  அவர்களின் ஏற்பாட்டில்,

கடந்த சனிக்கிழமை (14/03) அன்னை இந்திரா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

முதியோர் சங்கத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் உறுப்பினர், விவசாய சம்மேளனத்தின் செயலாளர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த அமரர் வசந்தகுமாரி இரத்தினசிங்கம் அவர்களுடைய ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அன்னாரின் நினைவாக அவரது கணவரின் நிதிப்பங்களப்புடன் யாழ்.லயன்கழகத்தின் லயன். கு.ஜெயந்தன் அவர்களினால்  நிகழ்வில் கலந்து கொண்ட  முதியோர்களுக்கு போர்வைத்துணியும்,துவாய் போன்ற பொருட்கள் அடங்கிய பொதிகளும்  வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article