யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை – நல்லூர் தேரை முன்னிட்டு பிரதமர் அறிவுரை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினம் (ஒகஸ்ட் 21) நடைபெறவுள்ள நிலையில், யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று (ஒகஸ்ட் 20) பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, பிரதமர் உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுரை வழங்கியதன் பேரில் நாளை யாழ் மாவட்டம் முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article