“எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள் ” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் நடாத்தும் சிறுவர், முதியோா் மற்றும் மாற்றாற்றலுடையோா் தின நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் கடந்த 13 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பழைய கச்சேரி கட்டடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பேச்சு, குழுநடனம், பாடல் நடனம் ,கவிதை போன்ற சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், சிறுவர்கள் மீதான சமூகத்தின் அக்கறை , சிறுவர் உடல் உள நலன், போஷாக்கு , கல்வி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் , விழாக்களின் முக்கியத்துவம் என்பன தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துரை வழங்கினாா்.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலை உள வைத்திய நிபுணர் எஸ்.சிவதாஸ் அவர்களும், கல்வியியற்கல்லூரி் ஓய்வு நிலை விரிவுரையாளர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு.குருபரன் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், முதியோா்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.