யாழ் மாவட்ட செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் கடந்த 23 ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வீட்டுத் தோட்டத்தை ஊக்குவித்தல், சட்டஒழுங்கு விதிகளை கடைப்பிடித்தல், போதைவஸ்து பாவனையை தடுத்தல், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல், கிராம உத்தியோகத்தர்களுக்கான கடமைப்பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை முன்னெடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கிராம உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Share this Article