யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாய்த்தக் கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று(மார்ச் 3) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதில் சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்று உருவாக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

போதைப் பொருள் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் கச்சதீவு அந்தோனியார் தேவாலய உற்சவத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Share this Article