யாழ். மரபுரிமை மையத்தால் சங்கிலியன் தோரண வாசல் புனரமைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நல்லூர் பகுதியில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் சங்கிலியன் தோரண வாசல் காணப்படுகின்றது.

மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் முன்னெடுக்கப்படும் முதலாவது செயற்றிட்டமாகும்.

Share this Article