யாழ் மத்திய கல்லூரியில் இன்று(ஓகஸ்ட் 4) காலை 8.30 மணிக்கு தேசிய கல்வி நிறுவக அச்சிடல், வெளியீடுகள் துறையின் “புத்தக விற்பனையும் கண்காட்சியும் ஆரம்பமானது.
இன்று புத்தக கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு மிகச் சிறப்பாக ஆரம்பமாகி ஒரு நாளுக்கான ஆகக் கூடிய விற்பனை சாதனையை நிலைநாட்டியஉள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் நூல்களைக் கொள்வனவு செய்தனர்.
இவற்றுக்கு மேலதிகமாக சுமார் ரூபா 20 இலட்சம் பெறுமதியான நூல்கள் வடமாகாணப் பாடசாலைகளுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்காக தேசிய கல்வி நிறுவகத்தின் அன்பளிப்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.