யாழ் போதனா வைத்தியசாலையில் O+ kurutiக்கு தட்டுப்பாடு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிடிவ்’ O+  குருதிவகைக்குத் தற்போது தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் இதனைத்தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ‘ஓ பொசிடிவ்’ O+ குருதி வகைக்குத் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, தற்போது தட்டுப்பாடு மேலும் தீவிரமாகியுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.

எனவே, ‘ஓ பொசிடிவ்’O+ வகை குருதி உடையவர்கள், யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தந்து குருதிக் கொடையில் ஈடுபடுமாறுயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article