அவுஸ்திரேலியாவில் இருந்து அவுஸ்திரேலியா மருத்துவ உதவி நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட 50 மில்லியன் பெறுமதியான பல்வேறு உபகரணத் தொகுதிகள், யாழ் போதனாவைத்தியசாலையின் பயன்பாட்டிற்கு இன்று (செப். 24) கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள மிக முக்கியமான மருத்துவமனையாகிய யாழ் போதனாவைத்தியசாலையில் தினசரி 1000க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பல்வேறு உபகரணங்களின்தேவை அதிகரித்துள்ளது எனவே இன்று கையளிக்கப்பட்ட உபகரணங்கள் யாழ்போதனா வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது, சில ஆண்டுகளுக்குப் பிறகுபுதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்தவகையில், சுகாதார அமைச்சின் வழங்கப்படும் உபகரணங்களுக்கு அப்பால், தொண்டு நிறுவனங்களின் உதவியும் வைத்தியசேவைக்கு பெரிதும் உதவியாகஇருப்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக யாழ்போதனா வைத்தியசாலைக்கும் நாட்டிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கும்உபகரணங்களையும் சேவைகளுக்கான பல உதவிகளையும் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.