யாழ். போதனாவுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டகாசம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று காவலாளி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்த முயன்றதுடன், அங்கிருந்த பொருள்களைத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு(பெப்ரவரி 26) நடந்துள்ளது. பட்டா ரக வாகனத்தில் வந்த சிலர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பின்புற வாயிலால் ஏறிக் குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றுள்ளனர். அவர்களைக் காவலாளி தடுத்தபோது, காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றையும் வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

Share this Article