யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினைஎதிர்த்து பொதுமக்கள் நேற்றையதினம் (ஒக். 04) ஆர்ப்பாட்டம் ஒன்றில்ஈடுபட்டனர்.தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடைசெய்கின்ற போதும் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம்நீர்வேலிப்பகுதியில் மதுபானசாலை ஒன்றினை தொடர்ந்து திறப்பதற்கானஏற்பாடுகள் இடம்பெற்றவரும் நிலையில் அதனை உடனே நிறுத்துமாறு கோரிகோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று (ஒக். 4) மாலை இந்தஆர்ப்பாட்டம் எடுக்கப்பட்டது.
குறித்த விடயம் அடங்கிய மகஜர் ஒன்றிணையும் கோப்பாய் பிரதேச உதவிபிரதேச செயலர் சஞ்சீவன் ராதிகாவிடம் பொதுமக்கள் கையளித்தனர்.
நீர்வேலி பகுதியில் அத்தியார் இந்துக்கல்லூரி, கந்த சுவாமி கோவில்என்பவற்றிற்கு அருகிலே குறித்த மதுபான சாலை திறக்கப்படவுள்ளதால்பாடசாலை மாணவர்கள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இதனால்பாதிக்கப்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த கோரியும் பிரதேசவாதிகள்ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.