யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதிகளுக்கு தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கந்தசஸ்டி விரதம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் அருகாமையிலுள்ள வீதிகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 17 திகதி மற்றும் 19ஆம் திகதி வரை பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18ஆம் திகதி சூரன்போர் அன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணி வரையும் வீதி தடைசெய்யப்படவுள்ளது.

எனவே மக்கள் மாற்றுப் பாதைகளைக் கடைப்பிடிக்குமாறு மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Share this Article