யாழ் நகரில் இடையூறு விளைவித்த யாசகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் நகருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஜாதகம் பார்ப்பதற்கும், குறி சொல்லும் சேவைகளை வழங்குவதற்கும் வருபவர்கள், நகரின் முக்கிய பொது இடங்களில் கூடுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்காக நகருக்கு வருகை தரும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இன்று இலங்கைப் பொலிஸ் திணைக்களமும் சுற்றுலாத்துறையினரும் இணைந்து யாழ் நகரில் விசேட ஒழுங்குபடுத்தல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களை அப்பகுதியிலிருந்து அகற்றி, பொது ஒழுங்கை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share this Article
Leave a comment