யாழ் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட கணனி ஆய்வுகூடம் திறந்து வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் கல்வி பயிலும் தாதிய மாணவர்களுக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஒரு பாடமாக இருந்த போதிலும் அவர்களுக்கான கணினி ஆய்வுக்கூடம் ஒன்று இந்தப் பாடசாலையில் இல்லாமல் காணப்பட்டது.

இந்நிலையை நிவர்த்தி செய்யும் முகமாக அவர்களுக்கான இணைய வசதியுடன் கூடிய நவீன கணனி ஆய்வுகூடம் ஒன்று திரு . இராஜநாயகம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் ABAYAM Foundation நிறுவனத்தின் அனுசரணையில் இன்று(ஜூலை 28) மாணவர்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

Share this Article