யாழ் சிறையில் இந்திய மீனவருக்கு தீபாவளி இனிப்புப் பலகாரங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களிற்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம், 22 ஆம் திகதிகளில் ஊடுருவி மீன்பிடித்த சமயம் கடற்படையினரால் கைது செயப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பெயரில் யழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே தீபாவளித் திருநாளன்று இனிப்பு வகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள 22 இந்திய மீனவர்களிற்கும் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளினால் தீபாவளித் தினத்தில் இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Share this Article