யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை பகுதியில் போதைமாத்திரை வியாபாரத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்ட மூவர் இன்று (செப். 20) யாழ்ப்பாணம் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலீஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்அடிப்படையில்
180 போதை மாத்திரைகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த 18, 24 ,22 வயதுடைய03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார்மேற்கொண்டு வருகின்றனர்.