யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (26 மார்ச்) காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.
இதன்போது காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர்.
பின்னர் எதிர்ப்பினை அடுத்து காணியை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இதனிடையே குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பிரசன்னமாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.