யாழ் இந்துக் கல்லூரியின் மாணவ முதல்வர் சபையால் நன்கொடை வாரம் பிரகடனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நாளை (ஓகஸ்ட் 7) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையான காலத்தை நன்கொடை வாரமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவ முதல்வர் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

உங்களால் இயன்ற பாவித்த மற்றும் பாவிக்க முடியுமான நிலையில் உள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்கு உகந்த பொருட்களை இக்காலப் பகுதியில் மாணவ முதல்வர் சபையில் சேர்ப்பதன் ஊடாக சமுகத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள் என கோரிக்கை விட்டுள்ளனர்.

வழ‌ங்கு‌ம் பொருட்களை சீர்ப்படுத்தி பாடசாலையின் மாணவர்களுக்கும் இடர் பிரதேசங்களின் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்க தயாராக உள்ளதுடன் உதவியினை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றோம் என யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர் சபை தெரிவித்துள்ளது.

எமது பாடசாலை என்பதனை தாண்டி, மாணவர் மத்தியில் சமூகம் சார்ந்த ஈடுபாட்டை உருவாக்கும் இவ்வாறான முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article