யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் தொழிற் சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக் கிழமை), 16 ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய திகதிகளில் காலை 9 .00 மணி முதல் சவுதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற அரபு நாடுகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ருமேனியா போன்ற நாடுகளிலுள்ள தொழில் வாய்ப்புக்கான மாபெரும் தொழிற் சந்தை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு தொழில் வாய்ப்பை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்த 25 வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் அங்குள்ள தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வருகை தரவுள்ளனர்.

தங்களுக்கு பொருத்தமான தொழில் வெற்றிடங்களை பார்வையிட்டு அந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Share this Article