யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு பிரான்ஸ் பழைய மாணவர் சங்க ஆதரவில் அகில இலங்கைரீதியில்அழைக்கப்பட்ட புனிதர்கள் கல்லூரிகளுக்கு இடையில் நடாத்தும் அணிக்கு 07 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி இடம்பெறவுள்ளது.
இப்போட்டிகள் சனிக்கிழமை (ஜூன்21) ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 22) ஆகியஇரு தினங்கள் காலை 08:00 மணி முதல் சென் பற்றிக்ஸ் கல்லூரிமைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப் போட்டி தொடரில் பின்வரும் கல்லூரி அணிகள் பங்குபற்றவுள்ளன.
# யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி,
#இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி,
#ஊர்காவற்றுறை சென் அன்ரனிஸ் கல்லூரி,
# கொழும்பு சென் பெனடிக்ட் கல்லூரி
# அநுராதபுரம் சென் ஜோசப் கல்லூரி
#மன்னார்– நானாட்டான் டிலாசால் கல்லூரி
#மன்னார் சென் சேவியர்ஸ் கல்லூரி
#வென்னப்புவ ஜோசவ்வாஸ் கல்லூரி
#யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரி
#வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இக் போட்டிகளின் போது மாணவர்களைஉற்சாகப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்லூரி நலன்விரும்பிகள் மற்றும் ரசிகர்களை யாழ் – சென் பற்றிக்ஸ் கல்லூரி சமூகத்தினர் அழைத்து நிற்கின்றனர்.