By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பறாளாய் முருகனுக்கு புத்தரால் ஆபத்து!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பறாளாய் முருகனுக்கு புத்தரால் ஆபத்து!
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பறாளாய் முருகனுக்கு புத்தரால் ஆபத்து!

Last updated: 2023/08/04 at 9:45 PM
Published August 4, 2023 689 Views
Share
2 Min Read
SHARE

யாழ்ப்பாணம் – சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை, சங்கமித்தை வந்து இறங்கிய பின் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிட்டமை கலாசார அழிப்பு என வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் வெள்ளரசு மரம் உள்ள இடமெல்லாம் தொல்லியல் திணைக்களத்தின் கட் டுப்பாட்டுக்குள் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வெளியான வர்த்தமானியில் பல இடங்கள் தொல்லியல் துறைக்குரியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட் டுள்ளது.

கழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கும் சங்கமித்தை வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

வெள்ளரசு மரம் உள்ள இடம் எல்லாவற்றையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கிறதா? தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியை மீளப் பெறுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

யாழ். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரமானது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த சங்கமித்தாவின் அரச மரம் என வர்ணிக்கப்பட்டு அரச வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் இங்குள்ள அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறி வித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து, புத்தர் சிலைகளை நிறுவி, முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்தாக தெரியவருகிறது.

இதேவேளை கடந்த வருடம் (2022ஆம் ஆண்டு) மார்ச் மாதம் 15ஆம் திகதி பௌத்த தேரர்கள் சிலர் இந்த ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில், ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்த போது அதற்கு பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தால், தேரர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தினக்குரல்

You Might Also Like

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

Anarkali August 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் ஹெரோயினை நுகர்ந்த இளைஞர் உயிரிழப்பு!
Next Article தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற முதியோர் தினம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?