யாழ்ப்பாணத்தில் 108 ஜோடிகளுக்கு செல்வசந்நிதி ஆலயத்தில் கூட்டுத் திருமணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியிருந்தும் பொருளாதார சிக்கல்களின் காரணமாக திருமணம் நடைபெறாமல் இருந்த 108 ஜோடிகளுக்காக இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) கூட்டுத் திருமணம் நடத்தப்பட்டது.

சிங்கப்பூரை வதிவிடமாகக் கொண்ட துரை தம்பதியினரின் நிதி உதவியுடன், 108 ஜோடிகளுக்கும் ½ பவுண் தாலி, கூறைச் சேலை மற்றும் திருமணத்திற்குத் தேவையான பிற செலவுகளுக்கான தொகை வழங்கப்பட்டு, யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்தில் திருமணம் சிறப்பாக நடாத்திவைக்கப்பட்டது

இந்த 108 ஜோடிகளும் யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article