யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வர்த்தகக் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கின் நுழைவாயில் எனும் தெனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் 13ஆவது தடவையாக நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இடம் பெறவுள்ளது என்று யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ் ரில்க்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்ப நீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை சீருடையுடன் வரும் மாணவர்கள் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article