யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புக்களை தடை செய்யும் திட்டத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் வெளியிட்டுள்ளார்.
சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் மேற்கண்ட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு பாடசாலை மாணவர்களும், தனியார் வகுப்பு மாணவர்களும் பங்களிப்பதாகவும், அவர்களை பாதிக்கும் முக்கிய காரணியாக கையடக்கத் தொலைபேசி உள்ளதாகவும் அவர் கூறினார்.
முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணம் முழுவதும் நடத்தப்படும் தனியார் வகுப்புகள் நிறுத்தப்படும் எனவும், இதற்காக யாழில் உள்ள தனியார் துறை ஆசிரியர்களுடன் விரைவில் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.