யாழில் 14 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வு!- நான்கு சந்தேகநபர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
14 வயதுச் சிறுமியைக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப்பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தியமை பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்தச் செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்களும் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
Share this Article