யாழ்ப்பாணத்தில் நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ். நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று(ஜூன் 29) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், அராலி – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களின் செலுத்துநர்களும் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article