மருதனார்மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு இன்று (12) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூட பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியானது என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்படி நேற்று தொற்று உறுதியானவரது மனைவி (வயது-38), மகள் (வயது-12), மகன்கள் (6 – 3வயது) இருவர், மாமியார் (வயது-63) மற்றும் மைத்துனர் (வயது-25) ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருதனார்மடம் சந்தை வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது என முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.