யாழில் மகாத்மா காந்தியின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் ஜனன தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு இன்று (ஒக்ரோபர் 2) காலை 9.30 மணியளவில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜ், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன், சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன், வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article