யாழில் பஸ்களில் கைபேசிகளைத் திருடும் நபர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பெண்களின் கைபேசிகளைத் திருடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் முதியவர்களை இலக்கு வைத்து கைபேசிகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சந்தேகநபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 9 கைபேசிகள் கைப்பற்றப்பட்டன. கைபேசிகளை பறிகொடுத்தவர்கள் ஆதாரங்களைக் காட்டி கைபேசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Article