யாழில் நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நேற்று (மார்ச் 9) ஆரம்பமாகியது.

116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று இன்று(மாரச் 10) நாளை (மார்ச் 11) என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 9  மணியளவில் இரண்டு கல்லூரி கீதங்களுடன் ஆரம்பித்ததுடன் இரண்டு கல்லூரி அணி வீரர்களும் கை கொடுத்து அறிமுகப்படுத்தினர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியுள்ளது.

இந்த ஆண்டுடன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு பூர்த்தியாவதால் போட்டி தொடர்பான எதிர்பார்ப்பு இரு கல்லூரி மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் இரசிகர்களிடம் காணப்படுகிறது.

Share this Article