யாழில் தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சியில் கலந்து கொண்ட தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (ஏப்ரல் 18) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஒழுங்குப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் யாழ் மாவட்ட அலுவலகத்தினால் தொழில்முயற்சியாளர்களுக்கு பால் சார்ந்த உற்பத்தி பொருட்களை உருவாக்கல் மற்றும் பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றிலிருந்து நீரகற்றல் போன்ற தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சிகள் 81 முயற்சியாளர்ளுக்கு வழங்கப்பட்டன.

மாவட்டச் செயலக திட்டமிடல்பணிப்பாளர், மாவட்டச் செயலக உள்ளக கணக்காய்வாளர், விவசாய பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண உதவி பணிப்பாளர், கைத்தொழில் அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Article