யாழில் தொழிற் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு – பிரதி அமைச்சர் பங்கேற்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவை வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகளில் ஒன்றாக யாழ் மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் அலுவகத்தின் ஏற்பாட்டில் தொழிற் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றையதினம் (செப்.22) யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இந்நிகழ்வில்முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொழிற்சாலைகள் , மற்றும் தொழிநுட்பம் , இயந்திரசாதன வேலைகளில் ஈடுபடும்போது மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும்போது ஊழியர்களது பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் இதனபோது தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது யாழ் தொழிநுட்பக் கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன்,  மாணவர்கள் யாழ் மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் அலுவகத்தினர் , தொழில் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article