யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 63 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சில நாட்களிற்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றினை உடைத்து திருடியுள்ளார். அதன் பின்னர் கடை ஒன்றின் கூரை பிரித்து மூன்று இலட்சம் பணம், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சிகரட் என்பன திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மேலும் ஒரு கடையில் திருட முற்பட்ட சந்தேகநபரை கைது செய்தனர்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய இரண்டு திருட்டு சம்பவங்களும் அவரே செய்தமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article