யாழில் திடீரென தோன்றிய புத்தர் சிலையால் பரபரப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணற்றுக்கு அருகில் உள்ள அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலை இன்று (பெப்ரவரி 25) காணப்பட்டால் பரபரப்பு நிலவியது

நிலாவரைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் இராணுவத்தினரே இரவோடு இரவாக வைத்தனர் என்று தெரியவந்துள்ளது.

ஊர் மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து அந்தச் சிலை மீண்டும் இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டது.

புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதுடன், பொலிஸாரும், இராணுவத்தினரும் பிரசன்னமாகி இருந்தனர்.

Share this Article