தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவை வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகளில் ஒன்றாக வட பிராந்திய தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “சிறுவர் தொழிலை இல்லாதொழிப்போம்” எனும் தொனிப்பொருளில் சிறுவர் தொழில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றுமுன்தினம் (செப்.22) யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸவரா கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இந்நிகழ்வில்முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டிருந்ததுடன், வட மாகாண பிரதிதொழில் ஆணையாளர் சி.சிவறஞ்சினி, வடமாகண பிராந்திய அலுவலக உதவி தொழில் ஆணையாளர் க.நாகேந்திரன், யாழ்மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அ.அன்ரன் தனேஸ் மற்றும் தொழில் அலுவலர்கள் , தொழில் திணைக்கள அதிகாரிகள் , குறித்த கல்லூரியின் முதல்வர் , ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறுவர்களை தொழில்களில் இணைத்தலை தடுத்தல் தொடர்பாகவும் , அது தொடர்பான விழிபுனர்வு தொடர்பாகவும் மாணவர்களது நாடக ஆற்றுகை இடம்பெற்றதுடன் , தொழில் அலுவலர்களால் கருத்துரையும் வழங்கப்பட்டது.
சிறுவர்களது திறமையினை வெளிக்கொணரும் வகையில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான சித்திப்போட்டி இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற சிறார்களுக்கான பரிசில்களும் வழப்பட்டதுடன், நாடக ஆற்றுகையில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.




இதன்போது கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன், மாணவர்கள் யாழ் தொழில் திணைக்கள அலுவர்கள் , தொழில் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.