யாழில் சிறப்பு முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

திருட்டினை கட்டுப்படுத்தும் முகமாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் யாழ். குடாநாட்டு வீதிகளில் பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினர் மாலை வேளைகளில் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக பயணிப்போரை சோதனையிட்டதுடன், பயணிக்கும் வாகனங்களையும் சோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை தவிர்ந்து தேவையற்ற விதத்தில் வீதியில் பயணித்தவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாட்களில் யாழ். குடாநாட்டில் மூடப்பட்டிருந்த கடைகள், பாடசாலைகள், தேவாலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article