யாழில் இடம்பெற்ற உலகளாவிய குழந்தை உரிமை பாதுகாப்பு கருத்தரங்கு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்தியத் துணைத் தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து ‘போசாக்குஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவியகருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு‘ என்னும்தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்றையதினம் (செப்09) இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கானநிபுணருமான கலாநிதி சரண்யா ஜெயக்குமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இக் கருத்தரங்கில்  குழந்தைகளின் எதிர்காலம் வளமானதாக மாற்றுவதற்கானபாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்  தொடர்பில்   கருத்தரங்கு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், இந்தியதுணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Share this Article