யாழிலுள்ள தனியார் விடுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மொழி பேசும் லால் பெரேரா என்கிற 61 வயதுடையவரே இவ்வாறு நேற்று (நவம்பர் 5) இரவு உயிரிழந்துள்ளார்.

மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்த குறித்த நபர் அறைக்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article