யாழில் தொடரும் மணல் மாபியாக்களின் அட்டகாசம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரைக் கண்டு வீதியிலேயே மணலைக் கொட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இன்று (நவம்பர் 6) அதிகாலை அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பரில் மணல் கடத்தப்பட்ட போது பொலிஸார் வாகனத்தை மறித்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்ட மணலைக் கடத்தியவர்கள் வீதியிலேயே மணலைக் கொட்டிவிட்டு தப்பியோடிய போது வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்களும் சேதமடைந்தது வீதியில் விழுந்துள்ளமையினால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏட்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் வீதியோரமாக தமது போக்குவரத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article