மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று(நவம்பர் 14) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த நிலக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 09ஆம் திகதி குறித்த இளைஞன் 14 வயது சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் , யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Share this Article